Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துக்கு ஜோடி இவர் தானா ? வெளியாகியது புதிய அப்டேட் ….!!

Image result for ajith valimai

கடந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி இப்படத்திற்கான பூஜை நடத்தபட்டது. படத்தின் பூஜை நடைபெற்றாலும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவில்லை. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்கும் நடிகர் , நடிகைகள் யார் என்று முழுமையாக அறிவிக்க படவில்லை என்றாலும் நஸ்ரியா, வைகை புயல் வைடிவேல், உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகின்றது.

ஆனாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வலிமை படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கும் என்றும் , இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Image result for yami gautam

மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்_துக்கு ஜோடியாக இந்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்த “யாமி கெளதம்” நடிக்க போவதாக தகவல் சொல்லப்படுகின்றது.இவர் தமிழில் ‘கவுரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். வருகின்ற 2020 தீபாவளிக்கு “வலிமை” படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Categories

Tech |