அமெரிக்கா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் மூன்றரை கோடி மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார மதிப்பீடுகள் மற்றும் அளவீடுகள் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஜனவரி மாதத்தில் நாள்தோறும் சுமார் மூன்றரை கோடி மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இன்னும் 2 மாதங்களில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 300 கோடியாக உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பதோடு கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.