நாடு முழுவதிலும் வங்கிகள் அனைத்தும் மக்களுக்கான அத்தியாவசிய சேவையை வழங்கி வருகிறது. இவ்வாறு சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட உள்ள விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறையானது மாநில வாரியான விடுமுறை, பொதுவிடுமுறை மற்றும் பண்டிகைக்கான விடுமுறை என 3 அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தா ஆண்டு முடிவுக்கு வருகின்ற தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருப்பதால் தமிழகத்தில் வரும் வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதனை மக்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களான
ஜனவரி 1 – புத்தாண்டு
ஜனவரி 2 – ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 8 – 2வது சனிக்கிழமை
ஜனவரி 9 – ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 14 – பொங்கல் பண்டிகை
ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16 – உழவர் திருநாள்
ஜனவரி 22 – நான்காம் சனிக்கிழமை
ஜனவரி 23 – ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 26 – குடியரசு தினம்