பிக்பாஸிலிருந்து எலிமினேஷன் ஆன பின் அபிநய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவிட்டுள்ளார்.
‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, அபிநய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவிட்டுள்ளார். அதில் அவர், ”74 நாட்கள் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு உங்கள் ஆதரவு தான் காரணம். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. எனக்கு அந்த நிகழ்ச்சியில் தொடர அதிர்ஷ்டம் இல்லை. எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி”. என பதிவிட்டுள்ளார்.