Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”பணியாளர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும்”… குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும்..!!

சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று மனதில் பெருமிதம், எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு, குறித்த காலத்தில் நிறைவேறும். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்க கூடும். சிலர் கட்டலையிடுகின்ற பதவி கிடைக்கப் பெறுவார்கள்.

எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும், அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று வரவு இருந்தாலும் செலவு அதிகமாகவே இருக்கும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள், தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். பாசம் அதிகரிக்கும்.சொன்ன சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள் ஆகவும் இன்று இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை எப்போதும் போலவே எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கரும தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |