கைப்பேசி வாங்கிக் கொடுக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பல்லவராயன் வேட்டையில் சாந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாந்தினி தனது தாயிடம் கைப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சாந்தினி எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு விட்டு மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் சாந்தினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாந்தினி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.