Categories
மாநில செய்திகள்

“அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!!!

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும், ஒமைக்ரான் பரவல் 10% இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் பொது மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கடைகள், வணிக வளாகங்களில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |