தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இதனியத்தொடர்ந்து பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கருத்து நிலவிய நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.