தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மலேசியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மலேசியாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் 7வயது சிறுமி ஆகிய மூவரும் வந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 வயது சிறுமியை தவிர மீதி இருக்கும் எட்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் 33 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.