Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இன்னும் இரண்டே மாதம் தான்…. ஐஐடி ஆய்வு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் வேரியன்ட் கொரோனா பரவியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வேரியன்ட் அல்ல என்றும் கூறப்படுகிறது. எனினும் மக்களிடம் பீதி குறையவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வேரியன்ட்டால் 3வது அலை உருவாகும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் 3-வது அலை தொடங்கும். மேலும் இது பிப்ரவரி தொடக்கத்தில் உச்சத்தை அடையும். காஸியன் மிக்ஸர் மாடல் அடிப்படையில் இது கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் முதல் மற்றும் 2-வது அலையின் புள்ளி விவரங்களையும் வைத்து  கணிக்கப்பட்டது. தற்போது ஒமிக்ரானால் இந்தியாவில் பாதிப்புகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதை 3-வது அலையின் தொடக்கமாக குறிப்பிடலாம். டிசம்பர் 15-ம் தேதிக்குப் பின் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. பிப்ரவரி 3-ம் தேதியின்போது இது உச்சம் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |