Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு சிறை…. அதிரடி உத்தரவு…!!!!

சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழில் நடத்தி வந்த ஏ ஹெச் எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்ட் கோ ஆகிய இரு நிறுவனங்களும், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து இரு நிறுவனங்களின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், “ஆக்கிரமிப்புகளை கண்டறிய டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகள் விதிகளின்படியும், அனுமதியின்படியும் அமைவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மேற்கொண்டு கட்டிட அனுமதி வழங்க கூடாது.

விதிமீறல் கட்டிடங்களை சீல் வைத்து பிறப்பிக்கும் உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரும் மேல் முறையீடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை” என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், “நீதிமன்ற உத்தரவுகளை பற்றி கவலைப்படாமல், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளின் பதவிகளை பறிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது என்பது 2ஆம் கட்டமாக இருக்க வேண்டுமே. தவிர, அவர்களை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும்” என காட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், மனுதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை சேலம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், சென்னை, திருவேற்காட்டில் உள்ள பசு மடத்துக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |