Categories
மாநில செய்திகள்

“தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுக உடன் இருப்போம்”…. திருமாவளவன் பேட்டி….!!!!

சென்னையில் விடுதலை கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.  சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கினர்.  இந்த விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுகவுடன் இருப்போம். காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கினால் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும், தேசிய அரசியலிலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

Categories

Tech |