தமிழகத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் தோற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது அதிகப்படியாக சென்னையில் இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சந்தை, வணிக வீதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதை கடைபிடிக்காதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.