Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு…”ஒரு முக தன்மையுடன் பணிபுரிவது அவசியம்”.. பெண்கள் தாய்வீட்டு உதவிகளை பெறுவார்கள்..!!

விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் ஒரு முக தன்மையுடன் பணிபுரிவது அவசியம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் தாய்வீட்டு உதவிகளை கேட்டுப் பெறுவார்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையினருக்கு வெளியில் தங்க நேரிடும். அதிகமான பயணங்களால் சோர்வு ஏற்பட கூடும்.

மனதில் இனம் புரியாத கவலை இருக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை மட்டும் தவிர்த்துவிடுங்கள் அது போதும். கூடுமானவரை இன்று பொறுமையை கடைபிடியுங்கள். அதுமட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூட ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் கொஞ்சம் படித்த பாடத்தை மீண்டும் ஒரு முறை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு. எழுதி பார்ப்பதினால் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |