தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறியது, ஒமைக்ரான் தொற்றால் பாதித்து சிகிச்சையில் உள்ள 90% பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் மீதம் உள்ளவர்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி மட்டுமே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். வேறு எந்த மருந்துகளும் தேவையும் தற்போதைக்கு எழவில்லை என்று தெரிவித்துள்ளார்.