மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ராம்புர்கஹத் பகுதியில் கிருஷ்ணகோபால் தாஸ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு கிருஷ்ணா கோபால் தாஸ் பிரியங்கா தாஸிடம் அடிக்கடி சண்டையிடுவதும் அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து இவர்களின் பஞ்சாயத்து இரு குடும்பங்களிடையே பேசி தீர்க்கப்பட்டது. அதில் கிருஷ்ணகோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரின் மனைவி வீட்டில் சிறிது காலம் தங்கி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதனால் அவர் வீட்டோட மாப்பிள்ளையாக பிரியங்கா தாஸ் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். அதன்பிறகு வீட்டோட மாப்பிள்ளை இருப்பதற்கு அவர் பழகி கொண்டார். சொந்த வீட்டிற்குச் செல்லலாம் என்று மனைவி கூப்பிட்டாலும் அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா கோபால்தாஸ் மனைவியின் தாய் ஷிபானி ஆகியவர்களிடையே மறைமுகமாக தனது கள்ளக்காதலை தொடங்கியுள்ளார். பிரியங்கா தாஸ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் நெருங்கி பழகி காதலாக மாறிவிட்டது. இந்த உறவு சுமார் மூன்று ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. இதையடுத்து அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரியங்கா தாஸ் திடீரென ஒருநாள் இவர்கள் இடையே உள்ள உறவை கண்டுபிடித்துவிட்டால்.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணகோபால் மற்றும் மாமியார் ஷிபானி ஆகிய இருவர்களும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக குடும்பம் நடத்த தொடங்கிவிட்டனர். தன்னுடைய மகளுக்கு துரோகம் செய்ததையும் தாண்டி கணவனே தவிக்க விட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பிரியங்கா தாஸ் தன் கணவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.