பல வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் ரிஸ்க் எடுக்கலாம் எடுக்காமலேயே நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். இதில் “தேசிய சேமிப்புச் சான்றிதழ்” என்ற திட்டம் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலீடு செய்துள்ளார். இந்தத் திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு நம்முடைய பணத்தை எடுக்க முடியாது. கூடுதல் வட்டி மூலம் கிடைக்கும் லாபம் மெச்சூரிட்டியின் போது கிடைத்துவிடும்.
இதில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று முதலீடு செய்யலாம். தனியாகவோ கூட்டாகவோ இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு தற்போது 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே இதில் 1000 ரூபாய் முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் 1389.45 ரூபாயாக மாறும். அதாவது இப்போது ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஐந்து வருடங்களில் 1.38 லட்சம் ஆக மாறும். ஐந்து லட்சம் ரூபாய்க்கு தேசிய சேமிப்புச் சான்றிதழ் வாங்கினால் ஐந்து வருடங்களில் 6.27 லட்சமாக மாறும். ஆண்டு வாரியாக கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டியின் போது முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.