Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: இன்று முதல் தடை…. மாநில அரசு அதிரடி…!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. சமூக கூட்டங்கள், பேரணிகள், நடனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |