தெற்கு வட்டார வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் விடுவிக்க கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர், ஆனால் ராஜிவ் கொலை, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர். மேலும் நடிகர் அர்ஜுன் படத்தை போல எண்ணிய ஒரே ஒரு நாள் முதல்வராக்கினால் எல்லாவற்றையும் செய்து விட்டு விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.