இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் செய்ய ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ய செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவில்கள் தயாரிக்கும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நெய் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஆவின் தயாரிப்புகளான வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்ய இந்த முறை ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.