Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆஞ்சிநேயர் ஜெயந்தி விழா…. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி…. ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

ஆஞ்சிநேயர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் http://hrce.tn.gov.in இந்த இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் வீதம் என கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கட்டாயமாக முககவசம் அணிந்தும், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனைதொடர்ந்து கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் கோவிலுக்கு வருவதை தவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த தகவல்களை ஆஞ்சிநேயர் கோவிலின் ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |