கிறிஸ்துமஸ் கரோல் சர்வீஸில் இளவரசி கேட் வில்லியம் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பியானோ வாசித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இளவரசர் வில்லியமின் மனைவியும், பிரித்தானிய இளவரசியுமான கேட் வில்லியமிற்கு சிறுவயதில் இருந்தே பியானோ வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய ராயல் கரோல்ஸ் : டுகெதர் அட் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசி கேட் வில்லியம் பாடலாசிரியர் டாம் வாக்கருடன் சேர்ந்து “For Those Who Can’t Be Here” என்ற பாடலுக்கு அற்புதமாக பியானோ வாசித்து அங்கிருந்தவர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து இளவரசி கேட்டின் பியானோ வாசிப்பை கண்டு வியந்து போன பாடலாசிரியர் டாம் வாக்கர் இளவரசி கேட் அன்பான, கனிவான மற்றும் அழகான இதயம் கொண்டவர் என்று கூறி பாராட்டியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியானது ITV- ல் நேற்று இரவு ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஆனால் இது போன்ற நிகழ்வு வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடக்கும் என்று கூறிய டாம் வாக்கர் கிறிஸ்துமஸில் ராயல் கரோல்ஸ் ஒன்றாக இணைந்து பியானோ வாசிப்பது உண்மையிலேயே தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்று விவரித்து கூறியுள்ளார். அதேசமயம் இளவரசி கேட் முன்னனுபவம் எதுவும் இன்றி இசைக் கலைஞர்களுடன் இணைந்து பின்னணியில் பியானோ வாசித்தது உண்மையிலேயே அற்புதமான விஷயம் தான் என்று புகழ்ந்துள்ளார்.