ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது உள்ள தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது என்பது ஆய்வில் திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.
ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்த்து தடுப்பூசியில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் போராடுமா ? என்ற ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். அந்த ஆராய்ச்சியில் ஜான்சன் & ஜான்சன், பைசர், அஸ்ட்ரா ஜெனகா, மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக திறம்பட செயல்படுமே தவிர ஒமிக்ரானுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு பொருள் ஒமிக்ரானுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே ஒமிக்ரான் வைரஸ் இந்த தடுப்பூசி எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதேபோலவே வைரசுக்கு எதிராக உருவாக்கப்படுகின்ற ஆண்டிபாடி சிகிச்சைகள் மற்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகளும் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளது என்பது ஆய்வில் தெளிவாக தெரிய வந்துள்ளது. எனவே ஒமிக்ரான் வைரஸை ஒழித்து கட்ட வேண்டும் என்றால் புதிய தடுப்பூசியை தான் உருவாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.