இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒமிக்ரான் வைரஸ் பற்றிய சில பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதற்கிடையே ஆரம்பகட்ட ஆய்வுகள் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தகவல் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா வைரசை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.