Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு…”முக்கியமான பணியில் அக்கறை கொள்வீர்கள்”… கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும்..!!

கும்ப ராசி அன்பர்களே..!!! இன்று நீங்கள் முக்கியமான பணியில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் நலம் விரும்புவோரின் உதவிகள் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள அளவில் பணவரவு பெறுவீர்கள். வீட்டில் உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.

அனுகூலமான பலன்களை இன்று நீங்கள் அடையக்கூடும். எல்லா வகையிலுமே உங்களுக்கு நல்ல பலன் இன்று ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று சொன்ன சொல்லையும் நிறைவேற்றி காட்டுவீர்கள். கூடுதலாக இன்று முயற்சிகள் செய்து முக்கிய பணியையும் நிறைவேற்றுவீர்கள்.இன்று அக்கம்பக்கத்தினர் இடம் அன்பு பாராட்டுவீர்கள்.

இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். இன்று சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள் ஆகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும்  9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |