Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு…”உதவி பெற்றவர்கள் உதாசினமாக செயல்படுவார்கள்”… சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்..!!

மீன ராசி அன்பர்களே…!!! இன்று உங்களிடம் உதவி பெற்றவர்கள் உதாசினமாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவலை கொடுக்க வேண்டாம். இன்று பணவரவு கூடும் என்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிய ஆர்டர்கள் பெறுவது தொடர்பான அலைச்சல் கூடும். இன்று வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு இருக்கும். புகழ் ஓங்கி இருக்கும். அதுமட்டுமில்லாமல் சொத்துக்களை வாங்கி குவிப்பீர். அதற்கான வாய்ப்புக்கள் இன்று இருக்கு. அதாவது வீடு மனை போன்றவற்றை வாங்கக் கூடிய வாய்ப்புகள். புதிய வாகனம் வாங்க கூடிய வாய்ப்புகள் கூட இன்று இருக்கு. இன்று மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். தெய்வீக நம்பிக்கையும் கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |