8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த பெங்களூர் புல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது .
12 அணிகள் பங்கேற்றுள்ளன 8-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் 13-19 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி பின்தங்கி இருந்தது . இதன் பிறகு 2-வது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் அணி ஆல் அவுட் செய்து 21-19 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது இதன்பிறகு 22-22 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது . இறுதியாக 38-30 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி முதல் வெற்றியை ருசித்தது .
இதில் அதிகபட்சமாக பெங்களூர் அணியின் கேப்டன் பவன் செராவத் 9 புள்ளிகள் குவித்தார். இதன் பிறகு நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி- யு மும்பா அணிகள் மோதின. இதில் 31-27 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணி இரண்டாவது வெற்றியை பெற்றது .இதை அடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – குஜராத் அணிகள் மோதின .இப்போட்டியில் 31-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- உ.பி.யோத்தா அணியும், 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பால்டன்-தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் , இதையடுத்து ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் மோதுகின்றன.