Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. 91 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டாங்க…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!!

ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 % பேர் 2 டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தி இருப்பதாகவும், 3 பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான ஒமிக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையில் ஆய்வு செய்யப்பட்ட 183 ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 87 நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 7 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் 70 சதவீத ஒமிக்ரான் பாதிப்புகள் அறிகுறியற்றவை என்றும், 30 சதவீத வழக்குகளில் அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியபோது “இதுவரையிலும் ஆய்வு செய்யப்பட்ட 183 ஒமிக்ரான் பாதிப்புகளில், 87 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். டெல்லியில் 2 பேரும், மும்பையில் ஒருவரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களிடம் தான் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறது. அவர்களிடம் தொடர்புடைய சிலரிடம் தொற்று பரவி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |