சைனீஸ் க்ரீன் கறி
தேவையான பொருள்கள்
கோழி அரை கிலோ
லெமன் கிராஸ் 1
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் 2 கப்
தனியா தூள் 2 மேசைக்கரண்டி
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் .பின் கோழி தனியாத்தூள் நறுக்கிய லெமன் கிராஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் தேங்காய் பால் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேகவைத்து இறக்கவும்.
இப்போது சைனீஸ் க்ரீன் கறி தயார்