இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார் இந்த நிலையில் அவருக்கு விடைதரும் வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் விராட்கோலி, டிராவிட் கூறியிருப்பதாவது,” கிரிக்கெட் வாழ்க்கையில் ஹர்பஜன் சிங் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளார் .
ஆனாலும் அவர் தொடர்ந்து போராடி முன்னேறி வந்துள்ளார் .கடந்த 2001 ஆம் ஆண்டு அவர் அணியிலிருந்து நீக்கப்பட்ட போதும் சற்றும் தளராமல் தன்னை நிரூபித்து அணிக்கு மீண்டும் திரும்பினார் .அதே போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் .அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் அவர் 711 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் .இது சாதாரண விஷயமல்ல ” இவ்வாறு அந்த வீடியோவில் விராட் கோலி ,ராகுல் டிராவிட் இருவரும் ஹர்பஜன் சிங்கை பாராட்டிப் பேசி உள்ளனர்.