Categories
உலக செய்திகள்

மக்கள் அதிகம் குடியேற விரும்பும் நகரம் எது தெரியுமா?…. ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்….!!!!

மக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொள்ள விரும்பினால் எந்த நகரத்தை தேர்வு செய்வார்கள் ? என்பது குறித்த ஆய்வினை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது.

உலகில் உள்ள பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொள்ள விரும்பினால் எந்த நகரங்களை தேர்வு செய்வார்கள் ? என்பது குறித்த ஆய்வினை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த ஆய்வானது சராசரி மழைப்பொழிவு, வெப்ப நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் உலகிலேயே பொதுமக்கள் அதிகம் விரும்பும் நகரமாக முதலிடத்தில் துபாய் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் அங்கு மழையளவு 68 மி.மீ ஆகவும், சராசரி வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸில் இருந்து வருவதே ஆகும். அதனைத் தொடர்ந்து அமீரகத்தின் தலைநகரான அபுதாபி இரண்டாவது இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு சராசரி மழையளவு 42 மி.மீ ஆகவும், சராசரி வெப்பநிலை 27.9 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது. மேலும் பக்ரைன் நாட்டின் மனாமா நகர் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் வருடத்தில் 100 மி. மீ மழையளவும், சராசரி வெப்பநிலை 27.30 டிகிரி செல்சியசும் கொண்ட ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

Categories

Tech |