உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அதன்படி இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய குழு கொரோனா தொற்று அதிகம் உள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வுள்ள 10 மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளது. அதன்படி தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மத்திய குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.