Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கோவில் சிலைகள்…. அட்டகாசம் செய்த விலங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் கோவிலில் உள்ள சிலைகளை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் காட்டுயானைகள் டேன்டீ பணிமனை கதவு ஜன்னலை உடைத்து நாசப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

இதனைதொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் துர்க்கை அம்மன் கோவிலில் உள்ள மதுரை வீரன் சிலை, விநாயகர் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் உண்டியல்,பீரோ, அம்மனுக்காக வைத்திருந்த பட்டு துணிகள் போன்ற பொருட்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

Categories

Tech |