Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திட்ட அறிக்கை போட்டி…. முதல் பரிசு 5 லட்ச ரூபாய்…. நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பு…!!

கழிவுகளை கையாளுவது குறித்து சிறந்த திட்ட அறிக்கையை தயாரிக்கும் நபருக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் பொது கழிப்பிடம் மற்றும் தனிநபர் கழிப்பிடம் போன்றவை கட்டி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து குப்பைகளை பெற்று பயோமெட்ரிக் மூலம் கியாஸ் உற்பத்தி செய்தல், உரம் தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பொள்ளாச்சியை கழிவுகள் இல்லாத நகரமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக திட்ட அறிக்கையை தயாரிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கூறும் போது, பொள்ளாச்சி நகராட்சியில் தூய்மை பாரதம்-2.0 திட்டத்தின் கீழ் திட மற்றும் திரவ கழிவுகளை கையாளுவது குறித்து திட்ட அறிக்கையை சமர்பிக்கலாம். இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ. 5 லட்சம், 2-வது பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 3-வது பரிசாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 4-வது பரிசாக 1 லட்ச ரூபாய், 5-வது பரிசாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தன்னார்வலர்களும், பொதுமக்களும் திடகழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வரைவு திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |