Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! வெறும் 40 நிமிடங்களில்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….. டிக்கெட் முன்பதிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடங்களில் 4.60 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

ஜனவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரை தினமும் 12,000 300 ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்காக 13-ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை தினமும் 20,000 300 ரூபாய் டிக்கெட் 23-ம் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை தினமும் 12,000 300 ரூபாய் டிக்கெட் வெளியிடப்பட்டன. இந்த டிக்கெட்டுகளை பெற ஒரே சமயத்தில் 14,00,000 பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி செய்துள்ளனர். இருந்தாலும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட 22 நிமிடங்களில் 3,20,000 டிக்கெட்டுகள் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவு தொடங்கிய 40-வது நிமிடத்தில் 4,60,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையால் கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 11-ஆம் தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்துக்கு வரமுடியாத பக்தர்கள் ஜனவரி மாதம் 10-ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 10-ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பழைய தரிசன டிக்கெட் மூலம் ஆன்லைனில் புதிய தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல் தினமும் 5,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், தினமும் 5,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாகவும் கவுண்டர்களிலும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியை கடக்கும் முன், 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போன்றவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை காண்பித்தால் மட்டுமே திருமலைக்கு செல்லும் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |