ஒடிசாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார். சுதர்சன் 5,400 ரோஜா மலர்களுடன் மற்ற பூக்களையும் சேர்த்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்த சிற்பம் 50 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டுள்ளது.
மேலும் இந்த சிற்பத்தை வடிவமைக்க 8 மணிநேரம் ஆகியுள்ளது. மேலும் இவற்றிற்கான ஆயத்த பணிகளுக்காக சுதர்சன் மற்றும் அவரது குழுவினர் 2 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் அவர் அந்த மணல் சிற்பத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் விழாவை ஒருநாள் விதிமுறைகளை மீறாமல் கொண்டாடி மகிழுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி பத்மஸ்ரீ விருது பெற்ற சர்வதேச மண் சிற்பக்கலை நிபுணர் சுதர்சன் பட்நாயக் பேசியதாவது,
உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கிவிட்டது. அதனை கருத்தில் கொண்டு இந்த சிற்பத்தில் இருக்கும் கிறிஸ்மஸ் தாத்தா சிற்பம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவும், என்ற செய்தியைப் பரப்பும் விதமாக இந்த சிற்பத்தை வடிவமைத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.