Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடைகளில் தேங்காய், கடலை எண்ணெய்”….. விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகம் உள்ளிட்ட நியாயவிலை கடைகளில் பாமாயில் போன்று தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக குடும்பங்களுக்கு,2,20,14,963 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,88,72,049 பேர் பயனடைகின்றனர். ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. பனை வெல்லம் போன்றவை வினியோகம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் வெளிநாட்டு பொருட்களுக்கு கொடுக்கும் சலுகையை குறு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றது. ஆனால் உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகளுக்கு மாநில அரசு எந்தவித சலுகைகளையும் வழங்குவது இல்லை என்று வேதனை தெரிவித்தார்.

தமிழக அரசு நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை விநியோகம் செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை கருத்தில் கொண்டு இதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |