இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. அதில் இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஆனாலும் இந்தியாவில் இதுவரை 415 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,286 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் 77,032 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் ஒமைக்ரான் தோற்று தொடர்ந்து அதிகரித்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.