Categories
தேசிய செய்திகள்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”…. 3 திருமணம் செய்தவரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணை டாக்சி டிரைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்காளத்தில் ஷபிகுல் இஸ்லாம் வசித்து வருகிறார். இவர் டாக்சி டிரைவராக இருக்கிறார். இவருக்கு 3 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஷபிகுல் இஸ்லாம் தன் 3-வது மனைவியுடன் அரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார். இதனிடையில் ஷபிகுலுக்கு குருகிராமில் வசித்து வந்த  நர்ஹிஸ் ஹடூன்(25) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதியன்று பால் வாங்க சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நர்ஹிஸின் தந்தை தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து  காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி தெற்கு நகர்-1 மாவட்டத்தில் நர்ஹிஸ் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், நர்ஹிஸ் கடைசியாக ஒரு டாக்சியில் ஏறிச்சென்ற அந்த வண்டி எண் உள்ளிட்டவற்றை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த டாக்சியை ஷபிகுல் இஸ்லாம் ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
இதனால் தனிப்படை அமைக்கப்பட்டு ஷபிகுல்லை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மேற்குவங்காள மாநிலம் புல்வாரி சவுக் பகுதியில் இந்தியா வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்த இஸ்லாம் ஷபிகுல்லை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதனைதொடர்த்து  கைதானவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷபிகுல் இஸ்லாமுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமானது தெரியவந்தது.
மேலும் இளம் பெண்ணான நர்ஹிஸ் ஹடூனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷபிகுல் கேட்டுள்ளார். ஆனால் தன்னை திருமணம் செய்த நர்ஹிஸ் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்ததுவிட்டு குருகிராமில் இருந்து மேற்குவங்காளத்திற்கு வந்துவிட்டதாக காவல்துறையினரிடம் ஷபிகுல் இஸ்லாம் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஷபிகுலிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |