Categories
மாநில செய்திகள்

JUSTIN : மீண்டும் இன்று 2வது முறையாக லேசான நில அதிர்வு….  வெளியான தகவல்….!!!!

வேலூர் பேரணாம்பட்டு அருகே தரைக்காடு பகுதியில் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதை தொடர்ந்து தற்போது சற்று நேரத்திற்கு முன்பாக மீண்டும் தரைக்காடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலூரில் ஒரே நாளில் இரு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Categories

Tech |