இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போளிப்பாக்கம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது வீட்டின் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஜீவாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆவதால் ஜீவாவின் தற்கொலை குறித்து கோட்டாட்சியர் பூங்கொடி விசாரணை செய்து வருகிறார். இதில் ஜீவாவை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்திருக்கிறது. மேலும் கணவர் கார்த்திகேயன், மாமியார் நரசிம்மன் மற்றும் மைத்துனர் ஜீவா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.