Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி கைது …!!

 நாகர்கோவில் அருகே கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார் .

கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தச்சு வேலை செய்து வருகிறார்  .இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார் .இந்நிலையில் தகவலறிந்த போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர் .ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில்  இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது .

ஐயப்பன் தினமும் குடித்து விட்டு தகராறு செய்வது வழக்கம் என்பது தெரிய வந்தது .அதுபோன்று நேற்றும் ஐயப்பன் குடித்து விட்டு தகராறு செய்த போது கோபம் அடைந்த கிருஷ்ணவேணி அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்து கொலை செய்து நாடகமாடியுள்ளார் .அவரை போலீசார் கைது செய்தனர் .

Categories

Tech |