Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி கொடுத்த இன்ஜினியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இன்ஜினீயரான பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிரபாகரன் அதிகமானோருக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் கடன் சுமையால் அவதிப்பட்ட பிரபாகரன் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பிரபாகரன் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |