திருப்பூரில் உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அங்கு பயிலும் மாணவர்களை சாதிப்பெயரை சொல்லி திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த பள்ளியில் படித்து வரும் பட்டியல் இன மாணவர்களை அவர் கழிவறையை சுத்தம் செய்ய வலியுறுத்தியுள்ளார். அவர்களைச் சாதிப் பெயரை சொல்லி திட்டவும் செய்துள்ளார். இந்தச் செயலுக்காக தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே, இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு, கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் மங்கலம் காவல்துறையினர், தலைமை ஆசிரியை கீதா மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.