Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தங்கத்தில் தேவாலயம்”கண்டு களித்த பொதுமக்கள்…. பொற்கொல்லரின் செயல்….!!

தங்கத்தில் செய்யப்பட்ட வேளாங்கண்ணி தேவாலயத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள இளமையாக்கினார் கோயில் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பொற்கொல்லரான இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து இருக்கிறார்.

இதனை அடுத்து சிறிய அளவில் செய்த வேளாங்கண்ணி தேவாலயத்தை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றுள்ளனர். இதனை போல் முத்துக்குமரன் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால் மற்றும் நடராஜர் கோவில் உள்ளிட்டவைகளையும் செய்து இருக்கிறார்.

Categories

Tech |