Categories
கிரிக்கெட் விளையாட்டு

’83’ படத்திற்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு ….!!!

1983 -ஆம் ஆண்டு  இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட  ‘83’ திரைப்படத்திற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு  தெரிவித்துள்ளார்.

கடந்த 1983 -ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்ற கதையை ’83’ என்ற பெயரில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது .இதில் கபீர் கான் இயக்கியுள்ள இப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவாவும் நடித்துள்ளனர் .அதேபோல் 1983-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர் .இப்படம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு வெளியாக இருந்த இப்படம் கொரோனா தொற்று பரவல்  காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெளியான இந்தப் படத்தை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “இதைவிட சிறப்பான முறையில் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணத்தை மீட்டுக் கொண்டு வர முடியாது .அற்புதமாக உருவாக்கப்பட்ட இப்படம் 1853 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது உண்டான உணர்வுகளிலும், நிகழ்வுகளிலும் நம்மை மூழ்கடித்து உள்ளது. படத்தில் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர் .  ரன்வீர் சிங் சிறப்பாக நடித்துள்ளார் ” என விராட் கோலி பாராட்டியுள்ளார்.

Categories

Tech |