Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

805 பிளாஸ்டிக் பறிமுதல்…. கடைகளுக்கு சீல்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!

அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 805 கிலோ பிலாச்த்க் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின் படி நகராட்சி துப்புரவு அலுவலர் திரு மூர்த்தி துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னகடை வீதி, பெரியகடைவீதி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 255 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இதேபோல் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நடந்த சோதனையில் திருச்செங்கோடு வடக்கு ரத வீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அங்கிருந்த சுமார் 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |