Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாக் செய்த இளம்பெண்…. சடலமாக தொங்கிய காதலன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவில் வீதியில் ஆட்டோ டிரைவரான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அஜய்யும் புளியம்பட்டியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உனது காதலி வேறு ஒருவரை காதலிக்கிறார் என அஜய்யிடம் யாரோ கூறியுள்ளனர். இதுகுறித்து வாட்ஸ்அப்பில் கேட்டதற்கு அந்த இளம்பெண் பேச மறுத்து அஜய்யின் எண்ணை பிளாக் செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அஜய் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இதனையடுத்து தனது வீட்டிற்கு திரும்பி வந்த அஜய் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜயின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |