Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக காவல்துறையில் சிறப்பு கால முறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558 தூய்மை பணியாளர்களுக்கும் கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக காவல்துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை டிஜிபி உள்ளிட்டோர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரணை செய்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் சிறப்பு காலமுறை ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் கோர முடியாது எனவும், எந்த பாரபட்சமும் காட்டவில்லை எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. உதவியாளர்களுக்கு சமமான பணி, சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என பணியாளர்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அதிகாரிகளால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிக அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மாவட்ட அளவில் விண்ணப்பங்கள் வரவேற்று தேர்வு செய்யப்படாமல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சமமான ஊதியம் கோர முடியாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |