Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. மஞ்சள் பையில் 20 பொருட்கள்…. வெளியான அரசு அறிவிப்பு…!!!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருள்கள் ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகின்றது.

தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழ் அகதிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் 20 வகையான பொருள்கள் உள்ளது. கடந்த டிசம்பர் 20ஆம் தேதி இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,

இந்த தொகுப்பில்,  அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை போன்ற 20 வகையான பொருட்கள் உள்ளது. இந்த பரிசுப்பொருளுடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும். வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்த 20 பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வழங்காமல் மஞ்சள் பையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் இதனை அரசு அறிமுகம் செய்துள்ளது.

Categories

Tech |